தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

முதலமைச்சர் சென்ற ஜிப்மர் மருத்துவமனை லிப்ட் பழுது - Jipmer hospital lift

புதுச்சேரி: மூச்சுத்திணறல் காரணமாக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியரைச் சந்திப்பதற்காக முதலமைச்சர் நாராயணசாமி மருத்துவமனை லிப்டில் சென்றபோது, பழுது ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

Puducherry collector Arun
Puducherry collector Arun

By

Published : Dec 2, 2020, 7:23 PM IST

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண் கடந்த சில தினங்களுக்கு முன்பு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து, தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் அவருக்கு இன்று மூச்சுதிணறல் ஏற்பட்டதால் ஜிப்மர் மருத்துவமனையில் அவசரமாக அனுமதிக்கப்படுள்ளார்.

இத்தகவல் அறிந்து அவரை நேரில் சந்திக்க, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, சுகாதாரத் துறை அமைச்சர் மல்டி கிருஷ்ணாராவ், தலைமைச் செயலர் அஸ்வினி குமார் ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்றனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக, மருத்துவமனையில் அவர்கள் சென்ற லிப்ட் பழுதாகி நின்றது. சிறிது நேரத்தில் பழுது சரிசெய்யப்பட்டு அவர்கள் வெளியே வந்தனர். இதனையடுத்து முதலமைச்சர் தவிர்த்து மற்றவர்கள் மாவட்ட ஆட்சியர் அருணை பார்த்து நலம் விசாரித்துச்சென்றனர்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details