டாக்டர் அம்பேத்கரின் நினைவுநாள் புதுச்சேரி அரசு சார்பில் இன்று அனுசரிக்கப்பட்டது. சட்டப்பேரவை எதிரே உள்ள அம்பேத்கரின் திருவுருவச்சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அம்பேத்கரின் 64ஆவது நினைவுநாள்: முதலமைச்சர் நாராயணசாமி மரியாதை - Puducherry State News
புதுச்சேரி: அம்பேத்கரின் நினைவுநாளையொட்டி அவரது திருவுருவச்சிலைக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து அங்கு அலங்கரித்துவைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கும் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். இதேபோல் திமுக, மதிமுக, அதிமுக, அமமுக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பெரியார் திராவிடர் கழகம், விடுதலை திராவிட கழகம், அம்பேத்கர் தொண்டர் படையினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தலித் சேனா, பீம் சேனா உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் அம்பேத்கரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.