இது தொடர்பாக இன்று (செப்டம்பர் 10) செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நீட் தேர்வுக்கு பயந்து மாணவர்கள் தங்களின் உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. மாணவர்கள் விரோதப்போக்கில் மத்திய அரசு செயல்படுகிறது. நீட் தேர்வினால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பிற்கு மத்திய அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். எனவே நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு புதுச்சேரியில் செண்டாக் முறையில் மருத்துவ மாணவர்கள் சேர்க்கையை நடத்த மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.
'நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்' - நாராயணசாமி
புதுச்சேரி: நீட் தேர்வு பயத்தால் மாணவர்களின் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
இன்று முதல் 15 குழுக்கள் பிரிக்கப்பட்டு கிராம பகுதியில் உமிழ் நீர் எடுத்து கரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிராம பகுதியில் ஒரு நாளைக்கு 3 ஆயிரம் பேர் சோதனை செய்யப்படுவார்கள். மத்திய அரசு செப்டம்பர் 21ஆம் தேதி முதல் மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று படிக்கலாம் என்று கூறியுள்ளது.
அதனுடன் சில விதிமுறைகளையும் அறிவித்துள்ளது தொடர்பாக கல்வித்துறை அமைச்சர் கமலகண்ணன் உடன் ஆலோசித்து 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளியில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுப்பது குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.