தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'என்.ஆர். காங்கிரசுடன் கூட்டணி வைத்த அதிமுகவிற்கு சூடு சொரணை இல்லையா?' - நாராயணசாமி - முதலமைச்சர் நாராயணசாமி அதிமுக மீது விமர்சனம்

புதுச்சேரி: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா துரோகி என்று கூறிய என்.ஆர். காங்கிரசுடன் கூட்டணி வைத்த அதிமுகவிற்கு சூடு சொரணை இல்லையா என்று முதலமைச்சர் நாராயணசாமி விமர்சன கேள்வியை முன்வைத்துள்ளார்.

நாராயணசாமி

By

Published : Oct 18, 2019, 5:26 PM IST

புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இங்கு பரப்புரை வரும் 19ஆம் தேதி 5 மணியளவில் முடிவடைய உள்ளதால் காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ் கட்சிகள் தீவிர பரப்புரை மேற்கொண்டுவருகின்றனர்.

இதில் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து முதலமைச்சர் நாராயணசாமி கிருஷ்ணா நகர் பகுதிகளில் தீவிர பரப்புரை மேற்கொண்டார். மேலும் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசுகையில், நேற்று காமராஜ் நகர் தொகுதியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். இதன் பிறகு மக்களிடம் நல்ல எழுச்சி ஏற்பட்டுள்ளது. அதனால் காங்கிரஸ் வெற்றி உறுதியாகிவிட்டது என்று தெரிவித்தார். மேலும் அதிமுகவுக்கு சூடு சொரணை இருந்தால் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா துரோகி என்று கூறிய என்.ஆர். காங்கிரசுடன் கூட்டணி வைத்திருப்பார்களா? என ஆவேசமாக கேள்வியெழுப்பிய அவர், அவர்கள் உண்மையான அதிமுகவாக இருந்தால் பரப்புரை செய்யக் கூடாது என்றும் விமர்சித்துள்ளார்.

காமராஜ் நகரில் பரப்புரையில் ஈடுபட்ட ஜான்குமார், நாராயணசாமி

மேலும் படிக்க: தமிழ்நாட்டில் நேரடி ஆட்சி; புதுச்சேரியில் மறைமுக ஆட்சி: மு.க.ஸ்டாலின்!

ABOUT THE AUTHOR

...view details