புதுச்சேரி அருகே அரியாங்குப்பம் அந்தோணியர் கோயில் வீதியில் உள்ள ஒரு வீட்டில், அரசின் அனுமதி பெறாமல் நெப்போலியன் எனும் நபரும், அவரது மனைவியும் பட்டாசு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதில் எதிர்பாராதவிதமாக நேற்று (செப்.28) பட்டாசு வெடித்ததில் அவர்களது வீடு இடிந்து தரைமட்டமானது. இவ்விபத்தில் கணவர், மனைவி இருவரும் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து தற்போது அரியாங்குப்பம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று (செப்.29) அரியாங்குப்பத்தில் விபத்து ஏற்பட்ட பகுதியில் முதலமைச்சர் நாராயணசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பட்டாசு விபத்து நிகழ்ந்த பகுதியில் முதலமைச்சர் நாராயணசாமி ஆய்வு! - புதுச்சேரி பட்டாசு விபத்து
புதுச்சேரி : அரியாங்குப்பம் அருகே பட்டாசு விபத்து நிகழ்ந்த பகுதியை முதலமைச்சர் நாராயணசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
puducherry cm
அப்போது பெற்றோரை இழந்து சோர்ந்திருந்த அத்தம்பதியினரின் பிள்ளைகளுக்கு அவர் ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து இடிந்த வீட்டை அலுவலர்களுடன் பார்வையிட்ட அவர், அரசு சார்பில் தேவையான உதவிகளை செய்து தருவதாகவும் உறுதி அளித்தார்.
இதையும் படிங்க:சிறையில் உயிரிழந்த மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி