தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா நிதியாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 2000

புதுச்சேரியில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கரோனா நிதியாக ரூ. 2 ஆயிரம் அவரவர் வங்கிக் கணக்கில் நாளை முதல் செலுத்தப்படுமென அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

puducherry-cm-narayanasamy-pressmeet-after-the-assembly-session
puducherry-cm-narayanasamy-pressmeet-after-the-assembly-session

By

Published : Mar 30, 2020, 1:05 PM IST

கரோனா வைரஸ் பாதிப்புகளுக்கு நடுவே இன்று புதுச்சேரி சட்டப்பேரவையில் அடுத்த மூன்று மாதங்களுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.

இதனையடுத்து முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், , '' கரோனா வைரஸ் தடுப்பு நிதியாக மத்திய அரசிடம் ரூ. 995 கோடி கேட்கப்பட்டுள்ளது. வரும் 31ஆம் தேதி (நாளை) முதல் கரோனா நிதியாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 2000 அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர் சந்திப்பு

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கரோனா தொற்று யாருக்கும் இல்லை. சிகிச்சை பெற்றவர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டார். கரோனா பாதிப்பு ஏற்பட்டால் மக்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான மருத்துவ உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன. சுகாதாரத்துறை சார்பாக ரூ. 7.5 கோடி ரூபாயும், பேரிடர் துறைக்கு ரூ. 12.5 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளன'' என்றார்.

இதையும் படிங்க:இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த நாராயணசாமி!

ABOUT THE AUTHOR

...view details