தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது... அனைவருக்கும் பெருமை' - நாராயணசாமி வாழ்த்து - ரஜினிகாந்திற்கு எனது வாழ்த்துகள்

புதுச்சேரி: 'மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனை விருது வழங்கியிருப்பது அனைவருக்கும் பெருமை. அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

narayanasamy

By

Published : Nov 5, 2019, 3:13 PM IST

புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, "தமிழ்நாட்டில் திருவள்ளுவர் சிலையை சேதப்படுத்தி தமிழ் மக்களுக்கு அவப்பெயரை உருவாக்கியுள்ளனர். திருவள்ளுவரை களங்கப்படுத்தி காவித் துணி போர்த்தியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு திருவள்ளுவரை அவமதித்தவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனை விருது வழங்கியிருப்பது அனைவருக்கும் பெருமை. நடிகர் ரஜினிகாந்துக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன" என்று நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details