புதுச்சேரி: புதுச்சேரி மாநில ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படுகிறது. இதில் முதலமைச்சர்கள், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றனர். மேலும் வரும் 16ஆம் தேதி, ஒருநாள் பந்த் போராட்டம் அறிவித்துள்ளனர்.
இதற்கிடையே ஆளுநர் கிரண்பேடியின் செயல்பாடுகள் தொடர்பாக புகார் செய்ய குடியரசு தலைவரைச் சந்திக்க புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நேரம் கேட்டிருந்தார். அவருக்கு இன்று(பிப்.10) பிற்பகல் நேரம் ஒதுக்கப்பட்டது. இதற்காக முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி ஆகியோர் நேற்று (பிப்.9) டெல்லி சென்று அங்கு முகாமிட்டிருந்தனர்.