புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் சட்டப்பேரவை நான்காவது மாடியில் உள்ள கருத்தரங்க அறையில் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான், கமலக்கண்ணன், தலைமைச் செயலர் அஸ்வனி குமார், அரசு துறை செயலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், முன்னாள் அமைச்சர்கள் ஜோசப் மரியதாஸ் , ஏழுமலை உள்ளிட்டோருக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.