மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி, புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ராஜிவ் காந்தியின் சிலைக்கு, முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, வன்முறை எதிர்ப்பு உறுதி மொழியை அங்கு கூடியிருந்த அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
இதேபோல், புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலும் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் நாராயணசாமியும், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதையும் படிங்க :கரோனா நிதி கேட்டும் பிரதமர் பதிலளிக்கவில்லை - நாராயணசாமி குற்றச்சாட்டு