தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா நிவாரண நிதி: ரூ.50 லட்சம் வழங்கிய முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி: கரோனா நிவாரண நிதிக்கு முதலமைச்சர் நாராயணசாமி தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 50 லட்சத்திற்கான கடிதத்தை சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் வழங்கினார்.

dsds
dssdsd

By

Published : Mar 28, 2020, 3:44 PM IST

கரோனா நோயைத் தடுப்பதற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கும், ஏழை எளியோருக்கு தேவையான உதவிகள் செய்யவும் முதலமைச்சர் நிவாரண நிதியின் தனிப்பிரிவு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. பொதுமக்களிடமிருந்தும் நிதியுதவி கோரப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று சபாநாயகர் அலுவலகம் சென்ற முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்துவை சந்தித்து தனது சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிவாரண நிதியாக ரூபாய் 50 லட்சத்தை முதலமைச்சர் நாராயணசாமி வழங்கினார்.

கரோனா நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சம் வழங்கினார் முதலமைச்சர் நாராயணசாமி!

இதேபோல் இன்று அரசு கொறடா அனந்தராமன் தனது இரண்டு மாத சம்பளம் மற்றும் பத்து லட்சம் ரூபாய் நிதியை முதலமைச்சர் நாராயணசாமியிடம் நேரில் வழங்கினார். இது மட்டுமின்றி பல்வேறு தொழிலதிபர்கள் முதலமைச்சர் நாராயணசாமியை சந்தித்து தங்களின் பங்களிப்பினை வழங்கி வருகின்றனர்.

இதையும் படிங்க...தமிழ்நாட்டில் மேலும் இருவருக்கு கரோனா பாதிப்பு: எண்ணிக்கை 40ஆக உயர்வு!

ABOUT THE AUTHOR

...view details