புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பல நாட்களாக கால் வலியால் அவதிப்பட்டுவந்துள்ளார். அவருக்கு கணுக்காலுக்கு கீழ் சவ்வு சேதமடைந்துள்ளதால் தொடர்ந்து நடக்கும் போது வலி இருந்து வந்தது. மருத்துவரை அணுகியபோது அவருக்கு நிவாரணிகள் அளித்துள்ளனர்.
ஆனால், மருத்துவர்களின் நிவாரணிகள் பயனளிக்காத காரணத்தால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தினர். இதையடுத்து, நேற்றிரவு புதுச்சேரியிலிருந்து புறப்பட்டு சென்னை சிம்ஸ் மருத்துவமனையில் நாராயணசாமி அனுமதிக்கப்பட்டார்.