புதுச்சேரியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுவரும் பெண் ஒருவர், கரோனா வைரஸ் தொற்றிலிலிந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள நினைத்து அவரது தலையில் வேப்பிலையை வைத்துக்கொண்டு, தூய்மைப் பணியில் ஈடுபட்டுவருகிறார்.
அவரிடம், ஏன் தலையில் வேப்பிலையை வைத்துக்கொண்டு வேலை பார்க்குறீங்க எனக் கேட்டதற்கு, “இப்போ எல்லாம் நாடுவிட்டு நாடு, நகரம் விட்டு நகரம் ஊருக்கு எவ்வளவோ தீங்கு வருகிறது. புதுச்சேரியில் நாங்க உழைக்கிறோம், போறோம்... வர்றோம்... எங்களுக்கு லீவும் கிடையாது, எதுவும் கிடையாது.