காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் வெற்றி பெற்றதையடுத்து காங்கிரஸ் கட்சி சார்பில் அத்தொகுதி மக்களுக்கு, முதலமைச்சர், காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.
புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளரைவிட ஏழாயிரத்து 170 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இதனையடுத்து தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.
இதையடுத்து மாலையில் காமராஜ் நகர் தொகுதி மக்கள் வாக்களித்து வெற்றிபெறச் செய்தமைக்காக காங்கிரஸ் கட்சி சார்பில் அத்தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுச்சேரி முதலமைச்சர் வாக்காளர்களுக்கு நன்றி இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் நாராயணசாமி, கட்சி மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத், காங்கிரஸ் கட்சித் தலைவர் நமச்சிவாயம், வெற்றிபெற்ற வேட்பாளர் ஜான் குமார், நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் ஆகியோர் திறந்தவேனில் காமராஜ் நகர் பகுதி சாமி பிள்ளை தோட்டம் பகுதியிலிருந்து வேன் மூலம் காங்கிரஸ் தொண்டர்கள் புடைசூழ அப்பகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ‘எந்த ஜென்மத்திலும் தொகுதி மக்களை கைவிடமாட்டேன்’ - வெற்றி பெற்ற ஜான்குமார்