தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் மின்சார ஆட்டோக்கள் அறிமுகம்

புதுச்சேரி: மின்சக்தியில் இயங்கும் புதிய மின்சார தானியங்கிகளை (ஆட்டோ) புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

மின்சக்தியில் இயங்கும் மின்சார ஆட்டோக்களை புதுச்சேரி முதலமைச்சர் அறிமுகப்படுத்தினார்!
மின்சக்தியில் இயங்கும் மின்சார ஆட்டோக்களை புதுச்சேரி முதலமைச்சர் அறிமுகப்படுத்தினார்!

By

Published : Oct 28, 2020, 9:19 PM IST

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் மின்சார சக்தியில் இயங்கும் புதிய மின்சார ஆட்டோக்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

புதுச்சேரி அரசு மற்றும் ஃபிரஷ் ஸ்கொயர் (fresh squre) தனியார் நிறுவனம் சார்பில் இயக்கப்பட்டவுள்ள இந்த ஆட்டோக்களை முதலமைச்சர் நாராயணசாமி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

அத்துடன், அத்தியாவசிய பொருள்கள் விநியோகம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட சிறப்பு ஆட்டோக்களையும் அவர் அறிமுகப்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஷாஜகான், ஃபிரஷ் ஸ்கொயர் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details