புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் தொழில் துறை அமைச்சர் ஷாஜகன் பிப்டிக், சேர்மன் சிவா, எம்எல்ஏ, அலுவலர்கள் சிங்கப்பூர் சென்றனர். அங்கு வசிக்கும் இந்தியர்களையும் தமிழர்களையும் சந்தித்துப் பேசி புதுச்சேரியில் தொழில் தொடங்குவதற்கு வருமாறு அழைப்பு விடுக்கவிருக்கின்றனர்.
தொழில்முனைவோர் கூட்டத்தில் பங்கேற்று புதிய அரசின் தொழில் கொள்கை குறித்தும் தொழிற்சாலைகள் ஆரம்பிப்பதற்கு அரசு வழங்கும் சலுகைகள் குறித்தும் விளக்கி கூறயிருக்கின்றனர்.