புதுச்சேரி மாநிலம் கரோனா காரணமாக கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுவருகிறது. குறிப்பாக கடந்த 2 மாதங்களில் புதுச்சேரியில், கரோனா தொற்றின் வேகம் அதிகரித்துள்ளது.
இதுவரை புதுச்சேரியில், 25 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 500 பேர் கரோனா காரணமாக இறந்துள்ளனர். ஆனால் இதுவரை மத்திய அரசு, புதுச்சேரி அரசு கோரிய
ஜிஎஸ்டி நிதி, கோவிட் நிதி போன்றவற்றை வழங்கவில்லை. மாறாக வெறும் 3 கோடி ரூபாய் அளவில்தான் கோவிட் நிதியாக, மத்திய அரசு வழங்கியுள்ளது.
புதுச்சேரி அரசு, மாநிலத்தில் இருக்கும் நிதியைக் கொண்டு, கோவிட் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், நோயாளிகளுக்குத் தேவைப்படும் உணவு வகைகள், ஆம்புலன்ஸ் வசதிகள் போன்றவற்றை செய்துவருகிறது. இருப்பினும் நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.