புதுச்சேரியில் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு நேற்றுமுதல் அமல்படுத்தப்பட்டது.
அரசு மருத்துவமனைகளில் புதுச்சேரி முதலமைச்சர் ஆய்வு
புதுச்சேரி: அரசு மருத்துவமனைகளில் முதலமைச்சர் நாராயணசாமி, சுகாதாரத் துறை அமைச்சர் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுமேற்கொண்டனர்.
இதையடுத்து, மாநில எல்லைகள் மூடப்பட்டு, கரோனா தொற்று உள்ளவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருகின்றனர். பெருந்தொற்று உள்ளவர்களைப் பாதுகாக்க புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் நாராயணசாமி, சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் இன்று ஆய்வுமேற்கொண்டார். அப்போது பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு சட்டப்பேரவையில் நன்றி தெரிவித்த உறுப்பினர்கள்!
TAGGED:
corona virus