புதுச்சேரியில் மத்திய அரசின் பொலிவுறு நகரத் திட்டத்தின்கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் மேம்பாட்டிற்காக 220 வீடுகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
புதுச்சேரி ராஜ்பவன் தொகுதிக்குள்பட்ட சின்னையாபுரம் பகுதியில் 18.04 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் கட்டடத்திற்கான பூமி பூஜை, அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.