புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில், குடியரசு தினவிழாவை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிக்கும் விழா நடைபெறும். இந்தாண்டும், தியாகிகள் கவுரவிப்பு விழா புதுச்சேரி அரசு, செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில், தாவரவியல் பூங்காவில் இன்று (ஜன.25) நடைபெற்றது. இவ்விழாவில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு தியாகிகளுக்கு இனிப்புகளை வழங்கி கவுரவித்தார்.
சுதந்திரபோராட்ட தியாகிகளுக்கு இனிப்பு வழங்கி கவுரவித்த புச்சேரி முதலமைச்சர்! - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
குடியரசு தினவிழாவை முன்னிட்டு, புதுச்சேரியில் நடந்த சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிக்கும் விழாவில் கலந்து கொண்ட அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தியாகிகளை கவுரவித்தார்.
சுதந்திரபோராட்ட தியாகிகளை கவுரவித்த புச்சேரி முதலமைச்சர்
இந்த விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குநர் வினயராஜ், வேளாண் துறை இயக்குநர் ராமகிருஷ்ணன் , செய்தித்துறை உதவி இயக்குநர் குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி தியாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:யார் போனாலும் ஆட்சிக்கு பாதிப்பில்லை - முதலமைச்சர் நாராயணசாமி