புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழா எளிய முறையில் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்நிலையில் பிரசித்திப் பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் முதலமைச்சர் நாராயணசாமி இன்று (ஆக. 22) தரிசனம்செய்தார். மணக்குள விநாயகரின் உற்சவமூர்த்தி அலங்காரம் செய்யப்பட்டுள்ள இடத்தில் வழிபாடுசெய்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, அவர் கூறியதாவது:
கரோனா பரவலைத் தடுக்க மத்திய அரசு விதித்த தடையின் காரணமாக புதுச்சேரியில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கும், ஊர்வலம் நடத்துவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனை இந்து அமைப்பினரும், பொதுமக்களும் ஏற்று எளிய முறையில் தற்போது விழாவைக் கொண்டாடிவருவது வரவேற்கத்தக்கது.