தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வெங்காயம் வழங்கி சோனியா காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்! - புதுச்சேரி முதலமைச்சர்

புதுச்சேரி: சோனியா காந்தி பிறந்தநாள் விழாவில் காங்கிரஸ் கட்சியினருக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி  வெங்காயம் வழங்கினார்.

Sonia Gandhi birthday celebration
Sonia Gandhi birthday celebration

By

Published : Dec 9, 2019, 4:58 PM IST

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சோனியா காந்தியின் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் முதலமைச்சர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் பங்கேற்று கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

அப்போது காங்கிரஸ் கட்சியினருக்கு முதலமைச்சர் நாராயணசாமி, கட்சித் தலைவர் நமச்சிவாயம் ஆகியோர் வெங்காயத்தை வழங்கினார்கள். கிலோ 120 ரூபாய் வீதம் 50 கிலோ வெங்காயத்தை வாங்கி, ஆளுக்கு அரை கிலோ விதம் வழங்கினார்கள்.

சோனியா காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்

வெங்காயத்தின் விலை உயர்வை சுட்டிக்காட்டும் வகையிலும் வெங்காய விலை உயர்வைத் தடுக்கத் தவறிய மத்திய அரசைக் கண்டிக்கும் வகையிலும் வெங்காயம் வழங்கப்பட்டதாக நாராயணசாமி தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'தெலங்கானா காவல்துறையை தமிழ்நாடு போலீஸ் பின்பற்ற வேண்டும்'

ABOUT THE AUTHOR

...view details