தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் நூற்றாண்டு பள்ளிகளை புதுப்பிக்க 15 கோடி ஒதுக்கீடு! - puducherry scholl renovation

புதுச்சேரி: நூற்றாண்டு பழமை வாய்ந்த பள்ளிகளை புதுப்பிக்க பதினைந்தரை கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சரின் நாடாளுமன்ற செயலர் லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளார்.

scholl

By

Published : Jul 12, 2019, 7:50 AM IST

நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த கலவை கல்லூரி, வஉசி உள்ளிட்ட பள்ளிகளின் கட்டடங்கள் சேதம் அடைந்ததால் அவை மூடப்பட்டன. மேலும், அங்குப் பயின்ற மாணவர்கள் வேறு பள்ளிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதனிடையே, அங்கு பயின்ற முன்னாள் மாணவர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் அந்தப் பள்ளிகளைத் திறக்க வலியுறுத்திவருகின்றனர்.

தொடர்ந்து, கலவை கல்லூரி, வஉசி, கடற்கரை சாலையில் உள்ள பழமை வாய்ந்த ப்ரோன்சேனாள் உள்ளிட்ட பள்ளிகள் பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என அப்பள்ளிகளின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் அரசுக்குக் கோரிக்கை விடுத்துவந்தனர்.

இந்நிலையில், இது தொடர்பாக அத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், முதலமைச்சரின் நாடாளுமன்ற செயலருமான லட்சுமி நாராயணனிடம் கேட்டபோது,

"இப்பள்ளிகளைப் புனரமைக்கவும், பள்ளிகளின் ஒரு பகுதியை இடித்துவிட்டு மீண்டும் பழமை மாறாமல் கட்டுவதற்கு சீர்மிகு நகர் திட்ட நிதியிலிருந்து பதினைந்தரை கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த கல்வியாண்டு முதல் இந்தப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது" என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details