புதுச்சேரியில் நாளை மறுநாள் (ஜூலை.20) கூடுகின்ற சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் இன்று(ஜூலை 18) நடைபெற்றுவரும் அமைச்சரவை கூட்டத்தில், பல முக்கிய அறிவிப்புகள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுச்சேரி சட்டப்பேரவையில் நிதிநிலை கூட்டத்தொடர் திங்கள்கிழமை(ஜூலை 20) காலை 9.30 மணிக்கு தொடங்க உள்ளது. துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் உரையுடன் தொடங்க உள்ள கூட்டத்தொடரில், 12:30 மணிக்கு முதலமைச்சர் நாராயணசாமி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளார்.