தொலைத்தொடர்பு துறையில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு நிலுவையிலுள்ள ஊதியத்தை விரைந்து வழங்க வேண்டும், பிஎஸ்என்எல் நிர்வாகம் ஆட்குறைப்பு, சம்பள குறைப்பு செய்வதை நிறுத்த வேண்டும். கரோனா காலத்திலாவது அரசு புரிந்துணர்வோடு செயல்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்! - bsnl workers leads protest
புதுச்சேரி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொலைத்தொடர்பு துறை ஒப்பந்த தொழிலாளர்கள் பிஎஸ்என்எல் அலுவலகத்தின் முன் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, நிரந்தர ஊழியருக்கு வழங்கும் ஊதியத்தில், ஐந்தில் ஒரு பங்கு குறைவாக ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளமாக தரப்படுகிறது. அந்த ஊதியத்தையும் கடந்த 10 மாதங்களாக நிர்வாகம் வழங்காமல் உள்ளது. ஊழியர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது, புதிய டெண்டர் முறையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். இந்த போராட்டத்தில் சங்கத்தை சேர்ந்த பலர் கலந்துகொண்டு, தகுந்த இடைவெளியை கடைபிடித்தனர். கைகளில் கருப்புக் கொடிகளை ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தினர்
இதையும் படிங்க: மின் கட்டணம் செலுத்த ஜூன் 6ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு - தமிழ்நாடு அரசு தகவல்