புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு 39 மாதங்களில் 17 மாதங்களுக்கு மட்டும் இலவச அரிசி வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் ஐந்து மாதங்களுக்கு அரிசிக்கு பதிலாக வங்கியில் பணம் வழங்கியுள்ளனர். ஆனால் தற்போது கடந்த 17 மாதங்களாக மக்களுக்கு இலவச அரிசி வழங்கவில்லை, வங்கியில் அரிசிக்கு பதிலாகப் பணமும் போடவில்லை என்று கூறி இன்று தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள குடிமைப் பொருள் வழங்கல் துறை அலுவலகம் முன்பு பாஜக கட்சி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலவச ரேஷன் அரிசி வழங்காததைக் கண்டித்து பாஜக போராட்டம்! - பாஜக
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி பகுதியில் இலவச ரேஷன் அரிசி வழங்கப்படவில்லை என்று கூறி குடிமைப்பொருள் வழங்கல் துறையை கண்டித்து பாஜகவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
![இலவச ரேஷன் அரிசி வழங்காததைக் கண்டித்து பாஜக போராட்டம்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4414409-thumbnail-3x2-pudu.jpg)
பாஜக போராட்டம்
அம்மாநில பாஜக தலைவர் சாமிநாதன் தலைமையில் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் முதலமைச்சர் நாராயணசாமிக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இலவச ரேஷன் அரிசி வழங்காததைக் கண்டித்து பாஜக போராட்டம்!