புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ வைத்திலிங்கம் வெற்றி பெற்றதையடுத்து, அந்தத் தொகுதியில் அடுத்த மாதம் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இன்று காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு தாக்கல் நடைபெற்றது.
புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் ஆறு பேர் விருப்பமனு தாக்கல் - பாஜக சார்பில் விருப்ப மனு
புதுச்சேரி: காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிடுபவர்களிடம் பாஜக சார்பில் விருப்ப மனு பெறப்பட்டது.
பாஜக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு தாக்கல்
இதேபோல் பாஜக தலைமை அலுவலகத்திலும், ஆறு பேர் விருப்ப மனுவை கொடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து வருகின்ற 30ஆம் தேதி வரை காமராஜ் நகர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் துறை அறிவித்துள்ளது.