புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு காரணமாக 45 நாள்களாக ஆட்டோக்கள் ஓடவில்லை. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக சிஐடியு (CITU) ஆட்டோ ஒட்டுநர்கள் சங்கம் ஈஸ்வரன் கோயில் வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நிவாரணம் வழங்கக்கோரி ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம் - நிவாரணம் வழங்க கோரி ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்பாட்டம்
புதுச்சேரி: ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ தொழிலாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
citu
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ தொழிலாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், இந்த ஆண்டுக்கான ஆட்டோக்களின் RTO கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.