தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரி சட்டப்பேரவை மார்ச் 30ஆம் தேதி கூடுகிறது - சட்டப்பேரவை கூட்டம் புதுச்சேரி

புதுச்சேரி: சட்டப்பேரவை கூட்டம் வருகின்ற 30ஆம் தேதி நடைபெறும் என பேரவை செயலர் வின்சென்ட் ராயர் அறிவித்துள்ளார்.

assembly
assembly

By

Published : Mar 27, 2020, 9:44 PM IST

புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். நிதிச் சிக்கல், மத்திய அரசின் நிதி காலத்தோடு கிடைக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதில்லை. அதற்குப் பதிலாக நான்கு அல்லது ஐந்து மாத செலவினங்களுக்கு சட்டப்பேரவையில் முன் அனுமதி பெறப்பட்டு வருகிறது.


அரசு ஊழியர்கள் ஊதியம், துறைவாரியாக நிதி ஒதுக்கீடு, மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்த நிதி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு சட்டப்பேரவை கூட்டி செலவினங்களுக்கு பேரவையில் ஒப்புதல் பெற வேண்டியது அவசியமாகும். இந்தியா முழுவதும் கரானா பாதிப்பால் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம்
இந்த நிலையில் இன்று புதுச்சேரி சட்டப்பேரவைச் செயலர் வின்சன்ட் ராயர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் வரும் மார்ச் 30ஆம் தேதி திங்கட்கிழமை காலை ஒன்பது முப்பது மணிக்கு கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்று முதலமைச்சர் நாராயணசாமி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளதாகவும், அதன்படி ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 5 மாத செலவுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது. மேலும் சில மணி நேரங்களில் சட்டப்பேரவை கூட்டத்தை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் பேரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ABOUT THE AUTHOR

...view details