தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல்: தொகுதிவாரியாக பொறுப்புகள் அறிவித்த காங்கிரஸ் - Congress announces responsibility

புதுச்சேரி: மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தயாராகும் வகையில், காங்கிரஸ் கட்சியில்  அமைச்சர்களுக்கு தொகுதிவாரியாக தேர்தல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல்: தொகுதிவாரியாக பொறுப்புகள் அறிவித்த காங்கிரஸ்
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல்: தொகுதிவாரியாக பொறுப்புகள் அறிவித்த காங்கிரஸ்

By

Published : Oct 31, 2020, 11:56 AM IST

இதுதொடர்பாக புதுச்சேரி மாநில காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், “எதிர்வரும் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அமைச்சர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினருக்கும், தொகுதிகள் பிரித்து அளிக்கப்பட்டு, அவற்றின் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவரும், முதலமைச்சரும் இந்த தேர்தலுக்கான பணிகளில் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள்.

இதன்படி பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயத்திற்கு, வில்லியனூர், ஊசுடு, மன்னாடிப்பட்டு, திருபுவனை, மங்கலம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல், சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவிற்கு, மாகி, ஏனாம், அரியாங்குப்பம், முதலியார்பேட்டை, உருளையன்பேட்டை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அமைச்சர் கந்தசாமிக்கு, நெட்டப்பாக்கம், பாகூர், ஏம்பலம், மனவெளி, உப்பளம் தொகுதிகளும், அமைச்சர் ஷாஜகானுக்கு, காலாப்பட்டு, லாசுப்பேட்டை, உழவர்கரை, தட்டாஞ்சாவடி, கதிர்காமம் ஆகிய தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அமைச்சர் கமலக்கன்னனுக்கு, திருநள்ளாறு, காரைக்கால் தெற்கு, காரைக்கால் வடக்கு, டி ஆர் பட்டினம், நெடுங்காடு ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கத்திற்கு, ராஜ்பவன், முத்தியால்பேட்டை, காமராஜ் நகர், நெல்லித்தோப்பு, இந்திரா நகர் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி ஒவ்வொரு தொகுதிக்கும் வட்டார காங்கிரஸ் தலைவர்கள், மற்றும் நிர்வாகிகளும் பொறுப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details