கரோனா நெருக்கடிக்கு மத்தியில் புதுச்சேரி மாநில அரசின் பட்ஜெட்டிற்கு ஒப்புதல் வழங்காமல் மத்திய அரசு இழுத்தடித்து தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதையடுத்து, நாளை காலை 9.30 மனிக்கு புதுச்சேரி சட்டப்பேரவையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது.
பின்னர், மதியம் 12.05 மணிக்கு முதலமைச்சர் நாராயணசாமி, 2020-21ஆண்டின் நிதிநிலை அறிக்கையை பேரவையில் தாக்கல் செய்கிறார். இந்த முழு பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், புதுச்சேரி மாநிலத்தில், கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், குறுகிய காலம் மட்டுமே கூட்டத்தொடரை நடத்த சட்டப்பேரவை செயலகம் முடிவு செய்துள்ளது.