தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வயதான தம்பதியினரை செருப்பால் அடித்த அரசு ஊழியர் - govt staff slipper hitting cctv

புதுச்சேரி: ஜெயாநகர் அருகே வயதான தம்பதியினரை செருப்பால் அடித்த அரசு ஊழியர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர்.

cctv
cctv

By

Published : Sep 22, 2020, 3:58 PM IST

புதுச்சேரி தட்டாஞ்சாவடியைச் சேர்ந்தவர் சுப்புராயன் (65), இவரது மனைவி லட்சுமி (59). ஜெயாநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்கி சுப்புராயான் காவலராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்பு அருகே, ராமலிங்கநகரைச் சேர்ந்த சரவணன் (55) என்பவர் மாடுகள் வளர்த்துவருகிறார். இவர் மாடுகள் அடிக்கடி அடுக்குமாடி குடியிருப்பிற்குள் நுழைவது வழக்கமாக இருந்துள்ளது.

காவல் நிலையம்


இதனால் சுப்புராயன் தம்பதியினர் இருவரும் மாடுகளை குடியிருப்புக்குள் நுழையாமல் தடுக்க அதன் உரிமையாளரிடம் கூறியுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த சரவணன், நடு வீதியில் வயதான தம்பதியரை செருப்பால் சரமாரியாக அடித்துள்ளார். இக்காட்சி அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.

இது தொடர்பாக சுப்புராயன் அளித்த புகாரின்பேரில் தன்வந்திரி நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சரவணனை தேடிவருகின்றனர். தேடப்பட்டுவரும் சரவணன் புதுச்சேரி அரசின் பொதுப்பணித் துறையில் பணியாற்றி வருகிறார்.

வயதான தம்பதியினரை செருப்பால் அடித்த அரசு ஊழியரின் சிசிடிவி காட்சி!

இதையும் படிங்க:வீட்டில் புகுந்து பைக்கை திருடி செல்லும் இளைஞர் - சிசிடிவியில் பதிவான காட்சி!

ABOUT THE AUTHOR

...view details