தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுவை முதலமைச்சர் நாராயணசாமியுடன் தொழில் வர்த்தக சங்கத்தினர் ஆலோசனை - narayanasamy press meet

புதுச்சேரி : விதிமுறைகளின்படி தொழில்சாலைகளைத் தொடங்குவது பற்றி புதுச்சேரி தொழில் வர்த்தக சங்கத்தினர் முதலமைச்சர் நாராயணசாமியுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

puducherry cm
puducherry cm

By

Published : May 3, 2020, 3:47 PM IST

கரோனா தடுப்பு நடவடிக்கையை ஒட்டி, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் பாதிப்பு மிகுந்த பகுதிகள், பாதிப்பு அல்லாத பகுதிகள், குறைந்த பாதிப்புள்ள பகுதிகள் என பச்சை, ஆரஞ்சு, சிவப்பு என மூன்று மண்டலங்களாக, நாட்டின் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இடங்களிலும் நிலவும் தீவிரத்தின் படி தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் விதிமுறைகளுக்கு உட்பட்டு தொழிற்சாலைகளைத் தொடங்க மாவட்ட நிர்வாகம் சார்பில், அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி ஊரடங்கில் தொழிற்சாலைகள் செயல்படும் நிலை தொடர்பாக, புதுச்சேரி தொழில் வர்த்தக சங்கத் தலைவர் டி.ஆர்.கருணாநிதி தலைமையில் எட்டு தொழிற்சாலைகளின் பிரதிநிதிகள் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் ஆலோசனை நடத்தினர்.

இதில், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நேரத்தில், தொழிற்சாலைகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு எவ்வாறு இயங்குவது என்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் புதுச்சேரி தொழில் வர்த்தக சங்கத்தினரின் கோரிக்கைகள் அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்ததாக சங்கத்தினர் கூறினர்.

இதையும் படிங்க : ஏழைகளுக்கு ஏழாயிரம் ரூபாய் நிதியுதவி வழங்க காங்கிரஸ் வலியுறுத்தல்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details