தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'தமிழ் மொழியை நீக்கி விட்டு ஆங்கிலம் சேர்ப்பு'- புதுச்சேரி மக்கள் எதிர்ப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் புதுச்சேரியின் வரலாற்றை அறிய வைக்கப்படும் கல்வெட்டுகள் எழுத்துப்பிழைகளுடனும், வழிகாட்டி பலகைகளில் தமிழ் மொழியை நீக்கி விட்டு ஆங்கில மொழியில் மட்டும் வைக்கப்பட்டு இருப்பதாக பொதுமக்கள் புகார் எழுப்பியுள்ளனர்.

ஆங்கில பலகைகள்

By

Published : Jul 8, 2019, 11:53 PM IST

புதுச்சேரி நகரை அழகுபடுத்தவும், புதுச்சேரி வரலாற்றை தெரிந்து கொள்ளக் கூடிய வகையில் ஒவ்வொரு தெருக்களிலும் அதன் வரலாற்றுச் சிறப்பை எடுத்துக் கூறும் கல்வெட்டுகள் பதித்து வருகின்றனர். ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் இப் பணிகள் நடைபெற்று வருகின்றன. புதுச்சேரி வரலாற்றில் கல்வெட்டுகளில் தமிழில் ஏராளமான எழுத்து பிழைகள் உள்ளன.

ஆவணக்காப்பகம் உள்ள 'மாஹே லபோர்தெனே' வீதியையும் அதில் உள்ள குறிப்புகளையும் தவறாக குறிப்பிட்டுள்ளனர். இந்த வீதீயின் பெயரை 'மாஹி தே லபூர்தோனே' வீதி என்று தவறாக குறிப்பிட்டுள்ளனர். சில இடங்களில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளில் பிழைகள் இருப்பதை தமிழ் அறிஞர்கள் சுட்டிக் காட்டியதை அடுத்து கல்வெட்டுகள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளன.

ஆங்கில பலகைகள்

ஏற்கனவே தமிழ் மொழி மற்றும் பிரெஞ்சு மொழிகளில் வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டிருந்ததை எடுத்து விட்டு, ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் புதுச்சேரி தெருக்களின் பெயர்கள் மற்றும் புதிதாக வைக்கப்பட்ட வழிகாட்டி பலகைகள் ஆகியவற்றில் ஆங்கிலத்தில் வைத்துள்ளனர். இது பொதுமக்களிடமும் தமிழர்களிடமும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details