தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்களின் உண்ணாவிரதப் போராட்டம்!

புதுச்சேரி: ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு பணியாளர்கள் நலக் கூட்டமைப்பினர், தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Puducheri PWD voucher workers strike

By

Published : Nov 25, 2019, 11:10 PM IST

புதுச்சேரி பொதுப்பணித் துறையில், கடந்த 2010ஆம் ஆண்டு முதல், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் 1311 நபர்கள் வவுச்சர் ஊழியர்களாக பணியமர்த்தப்பட்டு, கடந்த ஒன்பது ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு தினக்கூலியாக 200 ரூபாய் ஊதியமும், மாதத்தில் 16 நாட்கள் மட்டுமே பணிநாட்களாகவும் இருந்து வருகிறது.

ஆகவே தங்களுக்கு மாதம் 30 நாட்கள் பணிநாட்களாகவும், நாள் ஒன்றுக்கு 648 ரூபாய் ஆக ஊதியத்தை உயர்த்தி வழங்கக்கோரியும், மொத்தமுள்ள 1311 பணியாளர்களையும், மூத்தப் பணியாளர்களாக வரையறை செய்து, வருகிற டிசம்பர் மாதத்தில் முழுநேர ஊழியர்களாக பணி நிரந்தரம் செய்யக்கோரியும் வலியுறுத்தி, புதுச்சேரி அரசு பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று போராட்டத்தைத் தொடங்கினர்.

Puducheri PWD voucher workers strike

புதுச்சேரி, சுதேசி காட்டன் மில் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், பணி ஆணை உறுதி செய்யும் வரை, தொடர் வேலைநிறுத்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகத் தெரிவித்துள்ளனர். சங்கத் தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றுவரும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொண்டு, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:

காவலர் குடியிருப்புக் கட்டடம் அருகே எஸ்.ஐ தூக்கிட்டுத் தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details