புதுச்சேரி நெட்டுப்பாக்கம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக விமல்குமார் பணியாற்றி வந்தார். வில்லியனூரில் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வந்த இவர், இன்று மதியம் காவல் நிலையத்திற்கு அருகே உள்ள காவலர் குடியிருப்புக் கட்டடம் அருகே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
காவலர் குடியிருப்புக் கட்டடம் அருகே எஸ்.ஐ தூக்கிட்டுத் தற்கொலை! - nettukuppam SI suicide
புதுச்சேரி: நெட்டுப்பாக்கம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றியவர், காவல் குடியிருப்புக் கட்டடத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
nettukuppam sub inspector suicide
விமல்குமார் குடும்பப் பிரச்னையில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் பிரச்னையா என்று காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். அவர் பணிபுரிந்த காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாக விருதுபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மருத்துவமனை உணவகம் அருகே கழிப்பறை! சமூக அர்வலர்கள் கவலை!