தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் பூத்துக்குலுங்கும் சரக்கொன்றை மலர்கள்! - சரக்கொன்றை மலர்கள்

புதுச்சேரி : கடற்கரை பிரதான வீதிகளில் பூத்துக்குலுங்கும் சரக்கொன்றை மலர்கள் காண்போரைக் கவர்ந்து இழுக்கிறது.

சரக்கொன்றை மலர்கள்
சரக்கொன்றை மலர்கள்

By

Published : Jun 10, 2020, 4:53 PM IST

புதுச்சேரியில் சித்திரை மாதத்தில் மட்டும் மஞ்சள் நிறத்தில், பூத்துக்குலுங்கும் சரக்கொன்றை மலர்கள், நகரப்பகுதிகளில் ஒயிட் ஏரியா எனப்படும் சாலை ஓரங்களில் அதிகமாக தென்படுகிறது.

மேலும் அரசு அலுவலகக் கட்டடங்கள், அரவிந்த் ஆசிரமப் பகுதிகளில் சாலையோரங்களில் மஞ்சள் நிறத்தில் பூக்கள் கொத்துக் கொத்தாக பூத்துள்ளன.

மஞ்சள் பட்டுடுத்தியிருப்பதுபோல் காட்சியளிப்பதால், கண்களுக்கு இதமாக காட்சி கொடுக்கின்றது. இத்தகைய மரங்களை, அவ்வழியே செல்வோர் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

சரக்கொன்றை மரங்கள் என அழைக்கப்படும், இம்மரத்தின் பூக்கள் வசந்த காலத்தில் பூத்துக்குலுங்கும் தன்மை கொண்டவை. வறட்சியைத் தாங்கி வளரும் இயல்பு கொண்டவை. அதேபோல், ஆயுர்வேத மருத்துவத்திலும் கொன்றையின் வேர் முதல் பூக்கள் வரை பயன்படுத்தப்படுகின்றன.

ABOUT THE AUTHOR

...view details