தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விலை உயர்வைக் கண்டித்து சைக்கிள் பேரணி - நாராயணசாமி பங்கேற்பு - விலை உயர்வு

புதுச்சேரி: பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட சைக்கிள் பேரணியில் முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் பங்கேற்றனர்.

congress
congress

By

Published : Feb 22, 2020, 3:24 PM IST

கடந்த சில நாள்களாகப் பெட்ரோல், டீசல், கேஸ் விலை தொடர்ந்து உயர்ந்துவருகிறது. இதனைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வைக் கண்டித்து சைக்கிள் பேரணி நடைபெற்றது.

இதில் முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் மூத்தத் தலைவர் வீரப்பமொய்லி, மாநிலத் தலைவர் நமச்சிவாயம், மேலிடப் பொறுப்பாளர்கள் முகுல் வாஸ்னிக், சஞ்சய் தத், அமைச்சர்கள் மத்திய அரசுக்கு எதிராகச் சைக்கிள் ஓட்டி தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

விலை உயர்வைக் கண்டித்து சைக்கிள் பேரணி - முதலமைச்சர் நாராயணசாமி பங்கேற்பு!

சைக்கிள் பேரணி ராஜிவ் காந்தி சதுக்கத்திலிருந்து புறப்பட்டு, பல்வேறு வீதிகள் வழியாக தலைமை அஞ்சல் நிலையம் வந்தடைந்தது. பேரணியில் பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து மாட்டுவண்டியில் கட்சி நிர்வாகிகள் பயணம் செய்ததோடு கண்டன முழக்கங்களையும் எழுப்பினர். இதில் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: அடையாறு வெள்ளத் தடுப்புச்சுவர் கட்டுவதில் கோடிக்கணக்கில் முறைகேடு: திமுக ஆர்ப்பாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details