புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அப்போது அவரிடம், தெலங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டதற்கு புதுச்சேரி முதலமைச்சவர் நாராயணசாமி உட்பட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரித்துள்ளனர் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், எதிர்க்கட்சி என்றால் எதிர்க்கத்தான் செய்வார்கள். அவரது நியமனத்தில் தவறு ஏதும் இல்லை. அவர் தெலங்கானா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
மக்கள் சேவகராகவும் மருத்துவ சேவகராகவும் இருந்தவர் தமிழிசை-கிரண்பேடி புகழாரம்! - chennai
சென்னை: தமிழிசை சவுந்தரராஜன் மக்கள் சேவகராகவும், மருத்துவ சேவகராகவும் இருந்தவர் என புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.
![மக்கள் சேவகராகவும் மருத்துவ சேவகராகவும் இருந்தவர் தமிழிசை-கிரண்பேடி புகழாரம்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4325254-525-4325254-1567504400918.jpg)
tamilisai
விமான நிலையத்தில் பேட்டி
அவர் மக்கள் சேவகராகவும், மருத்துவ சேவகராகவும் இருந்தவர். தற்போது அவரது நியமனத்தால் தெலங்கானா மக்களுக்கு நன்மை நடைபெறும்” என்றார்.