புதுச்சேரி மாநில அரசு நிர்வாகத்தில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தொடர்ந்து தலையிட்டு வருவதாகக்கூறி, ராஜ்பவன் தொகுதியின் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் லட்சுமி நாராயணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்குத் தொடுத்திருந்தார். இதில், தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்றம், அமைச்சரவையின் முடிவுப்படியே ஆளுநர் செயல்படவேண்டும் எனத் தெரிவித்தது.
இந்நிலையில், அரசின் நடவடிக்கைகளில் குறிப்பாக, 30 பிரச்னைகளில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தலையிட்டதை சுட்டிக்காட்டியும், ஏன் இதன் மீது நீதிமன்றம் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கூடாது எனக் கேட்டும், காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் லட்சுமி நாராயணன் ராஜ் நிவாசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.