புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ” எதிர்கட்சித் தலைவர் ரங்கசாமி ஆளும் காங்கிரஸ் ஆட்சி நிர்வாக திறமையின்மையால் செயலிழந்து விட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் அரசை பற்றிக் குறைகூற ரங்கசாமிக்கு எந்தவித அருகதையும் இல்லை.
அரசை குறைகூற ரங்கசாமிக்கு தகுதியில்லை - புதுவை காங்கிரஸ் தலைவர்! - காங்கிரஸ் ஆட்சி
புதுச்சேரி: காங்கிரஸ் ஆட்சியைப் பற்றி குறைகூற என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமிக்கு தகுதியில்லை என்றும், 2021 ஆம் ஆண்டுத் தேர்தலிலும் காங்கிரஸ் - திமுக கூட்டணியே புதுச்சேரியில் ஆட்சி அமைக்குமென மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
என்.ஆர். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நடந்த பல்வேறு நிர்வாக சீர்கேடுகளால் ஏற்பட்ட விளைவுகள்தான் இன்றும் பிரதிபலித்து வருகின்றன. அதையும் சமாளித்து, மத்திய அரசு, துணைநிலை ஆளுநரின் தொல்லைகளையும் மீறி, இக்கட்டான சூழ்நிலைகளிலும் கூட மக்கள் நலத்திட்டங்களை தடையில்லாமல் காங்கிரஸ் அரசு செய்து வருகிறது. வரும் 2021 ஆம் ஆண்டிலும் காங்கிரஸ் - திமுக கூட்டணி, புதுச்சேரியில் மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி ” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பயிருக்கு பிந்தைய மானியமாக ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் - அமைச்சர் கமலக்கண்ணன்