புதுச்சேரி அரசின் அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் பேரவை வளாகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன் மற்றும் தலைமைச் செயலாளர் அஸ்வின்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதலமைச்சர் நாராயணசாமி காட்சிப்பதிவு வாயிலாகத் தெரிவித்தார். அதில், “புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கும், அங்கிருந்து புதுச்சேரிக்கும் பேருந்துகள் இயக்க தமிழ்நாடு அரசுடன் பேசி முடிவு எடுக்கப்படும். வழியில் எங்கேயும் நிறுத்தாமல் நேரடியாக பேருந்துசெல்ல நடவடிக்கை எடுக்கப்படும். தகுந்த இடைவெளியுடன் பேருந்துகளை இயக்க அனுமதிக்கப்படுகிறது.