டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் காவல் துறை துணையுடன் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதும், அவர்களின் வீடுகள், வழிபாட்டு இடங்கள் எரிக்கப்படுவதும் தடுத்து நிறுத்தப்பட வலியுறுத்தி மக்கள் உரிமை கூட்டமைப்பு, ஏஐடியுசி, பெற்றோர் மாணவர் சங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி ஆகியவற்றின் சார்பில் சுதேசி மில் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர். போன்ற மக்களுக்கு எதிரான சட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளதாகவும், இதனால் அவற்றை எதிர்த்து தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்திய மக்கள் மீது ஆர்எஸ்எஸ், பாஜகவினர் காவல் துறையினர் துணையுடன் தாக்குதல் நடத்தியது கடும் கண்டனத்திற்குரியது எனவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.