புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்க இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நாராயணசாமி, “ மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள இந்த நிதிநிலை அறிக்கையில், விவசாயிகள் கடன் தள்ளுபடி திட்டம் எதுவுமில்லை. விவசாயிகளுக்கு புதிய திட்டம் எதுவும் இல்லை. சாதாரண மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தி பொருட்களுக்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது.
தொடர்வண்டிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வேலைவாய்ப்புகள் பற்றி அறிக்கையில் ஏதுமில்லை. இது முழுக்க முழுக்க ஏமாற்றம் அளிக்கக்கூடிய நிதிநிலை அறிக்கையாக உள்ளது. இந்த பட்ஜெட் முதலாளிகளுக்கானதே தவிர, ஏழை எளிய மக்களுக்கானது அல்ல.