புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கட்டண உயர்வைக் கண்டித்தும் கட்டணப் பேருந்து இயக்கத்தைக் கண்டித்தும் மாணவர்கள் 20ஆவது நாளாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் வரும் 26ஆம் தேதி புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்க குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு புதுச்சேரி வருகிறார். அவரது கவனத்தை ஈர்க்கும்வகையில் புதுச்சேரி மாணவ அமைப்பினர் கறுப்புக்கொடி ஏந்தி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுவை பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் புதுச்சேரி லாஸ்பேட்டை நேதாஜி சிலை அருகே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. இப்போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத் தலைவர் ஜெயபிரகாஷ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் ஆனந்த் உள்ளிட்டோர் தலைமை தாங்கினர். இப்போராட்டத்தில் தாகூர் கலைக்கல்லூரி, அரசு சட்டக்கல்லூரி, சமுதாய கல்லூரி, மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளின் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மறியல் - 80 பேர் அதிரடி கைது!