தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் கொள்ளையர்கள் கைது - ரூ.1,40,000 பறிமுதல்! - puducherry police

புதுச்சேரி: சண்முகபுரம் பகுதியில் பணத்தை கொள்ளையடித்த இரண்டு பேரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

கொள்ளையடித்த 1லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பறிமுதல்

By

Published : Apr 10, 2019, 7:39 PM IST

புதுச்சேரி சண்முகாபுரம் மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மனைவி சாந்திமதி. கடந்த மாதம் 13ஆம் தேதி தட்டஞ்சாவடியில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்திய வங்கியில் தங்கள் கணக்கில் இருந்து 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை மருத்துவ செலவிற்காக எடுத்துக் கொண்டு வெளியே வந்துள்ளார்.

அப்போது அங்கே இருந்த இருவர் அவர் முதுகு மீது ஏதோ தூவியதால் அவரது முதுகுகில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விரைந்து வீட்டிற்கு ரங்கநாதன் வந்துள்ளார். அவரை பின்தொடர்ந்து 3 மோட்டார் சைக்கிளில் வந்த 7 பேரில் ஒருவர் வீட்டிற்குள் சென்று அவரிடம் இருந்த பணப்பையை பிடிங்கியதை தொடர்ந்து அவர்கள் அனைவரும் தப்பியோடி விட்டனர்.

இதனை அடுத்து மேட்டுப்பாளையம் காவல்துறையினருக்கு புகார் அளித்ததை அடுத்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கொள்ளை அடித்த அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் மேட்டுப்பாளையம் இந்தியன் வங்கி அருகே சந்தேகத்தின் அடிப்படையில் இருவரை காவல் துறையினர் விசாரித்ததில் அவர்கள் கொள்ளை அடித்ததை ஒப்புக்கொண்டனர். அவர்களிடமிருந்து ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர். கொள்ளை அடித்தது திருச்சியைச் சேர்ந்த அருண் பாண்டி மற்றும் மூர்த்தி என்று விசாரணையில் தெரியவந்துள்ளது, மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

புதுச்சேரியில் கொள்ளையர்களை கைது

ABOUT THE AUTHOR

...view details