தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் களைக்கட்டும் விவசாயிகளின் தைத்திருவிழா! - முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் விவசாயிகளின் தைத்திருவிழாவை மாநில முதலமைச்சர் நாராயண சாமி தொடங்கிவைத்தார்.

புதுச்சேரி நாராயணசாமி மலர்கண்காட்சி  புதுச்சேரி தைத்திருவிழா  முதலமைச்சர் நாராயணசாமி  pudhucherry thai festivel started
pudhucherry thai festivel

By

Published : Feb 8, 2020, 9:22 AM IST

புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் ஆண்டுதோறும் தைத்திருவிழா கொண்டாடப்பட்டுவருகிறது.

இந்தாண்டு தைத் திருவிழா மறைமலையடிகள் சாலையில் அமைந்துள்ள தாவரவியல் பூங்காவில் நேற்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

இந்த விழாவில் ஓசூர், குன்னூர், பெங்களூரு ஆகிய பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட எண்ணற்ற மலர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களை கவரும் வகையில் திராட்சைகளால் செய்யப்பட்ட வீணை, விதைகளால் உருவாக்கப்பட்ட புதுச்சேரி ஆயி மண்டபம் (மாநில அரசின் சின்னம்) போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரி தைத்திருவிழா

இதனைக்காண வரும் பொதுமக்கள் காய்கறிகளை வாங்கிச் செல்வதற்கு ஏதுவாக உழவர்சந்தை உள்ளிட்ட பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்விழாவினை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கிவைத்து பார்வையிட்டார்.

இதையும் படிங்க: 'நடிகர் கமல் ஒரு முட்டாள், நடிகர் விஜய் வழக்குத் தொடரலாம்'- அதிரடி சுப்பிரமணியன் சுவாமி

ABOUT THE AUTHOR

...view details