புதுச்சேரி அண்ணா 45 அடி சாலை சந்திப்பில் அமைந்துள்ளது விநாயாகர் கோயில். இக்கோயிலில் உண்டியல் வாசலில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்றிரவு (ஜூலை 17) கோயிலின் உண்டியல் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து கோயில் நிர்வாகம் காவல்துறையினரிடம் அளித்த புகாரைத் தொடர்ந்து கோயிலில் பொறுத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
புதுச்சேரியில் கோயில் உண்டியலை தூக்கிச் சென்ற இளைஞர்! - pudhucherry temple hundy theft
புதுச்சேரி: அண்ணா சாலை சந்திப்பில் அமைந்துள்ள விநாயகர் கோயில் உண்டியலை இளைஞர் ஒருவர் தூக்கிச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
புதுச்சேரி: கோயில் உண்டியலை அலக்காக தூக்கிச் சென்ற வாலிபர்
அதில், நேற்றிரவு ஆட்டோ ஒன்று இக்கோயிலின் முன்பு நிறுத்தப்பட்டது. அதிலிருந்து இறங்கிய இளைஞர் ஒருவர் கோயில் உண்டியலை தூக்கிக் கொண்டு மீண்டும் ஆட்டோவில் ஏறி அங்கிருந்து தப்பிச்சென்றது பதிவாகியிருந்தது. இந்த சிசிடிவி காட்சியின் அடிப்படையில் உண்டியலைத் திருடிய இளைஞரை காவலர்கள் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: சிசிடிவி: பட்டப்பகலில் ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனம் திருட்டு!