ஆண்டுதோறும் குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகிய நாள்களில் புதுச்சேரி அரசு அலுவலகங்கள் மின் விளக்குகளால் அலங்கரிப்பது வழக்கம். அதேபோல், நாளை (ஜனவரி 26) குடியரசு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு சட்டப்பேரவை வளாகம், ராஜ் நிவாஸ், தலைமைச் செயலகம், ஆயி மண்டபம், பாரதி பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை ஆகியவை வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன.
இரவு நேரங்களில் அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த மின் விளக்குகள் எரிய தொடங்கியவுடன் விதவிதமான வர்ண ஜாலங்களால் கட்டடங்கள் ஜொலித்தன. சட்டப்பேரவை வளாகம் தேசிய கொடியின் வண்ணங்களில் ஜொலித்தது. இதேபோல், கடற்கரை சாலை முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிப்பட்டுள்ளது.