இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வாட்ஸ்-அப் பதிவில், "பண்டிகை காலங்களில் புதுச்சேரிக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதில் முதியவர்கள் அதிகம் வருகை தந்தால் சுகாதாரம் பாதிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. நமக்கான சோதனைக் காலம் இன்னும் வரவில்லை.
புதுச்சேரியில் இன்னும் மக்கள் முகக் கவசம் முறையாக அணிவதில்லை. தற்போதுள்ள சூழலில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய பொறுப்புள்ளது. எனவே பொது மக்கள் சமூக இடைவெளியைக் கடைபிடித்து, முகக்கவசம் அணிய வேண்டும். அத்துடன் பண்டிகை காலங்களில் கூட்டங்களில் பங்கேற்பதைத் தவிர்க்க வேண்டும்.